சுய சோதனை: நீ காற்றில் பறக்கும் பட்டமா இல்லை பறவையா என்று சோதித்துக்கொள்

காற்று அடிக்கும் திசைக்கு பட்டமானது உயர பறக்கும், பல நேரம் பறவைகள் பறக்க இயலாத உயரம் கூட பறக்கும்,ஆனால் அது போகும் திசையையும் ,அதன் உயரத்தையும் பட்டத்தால் நிர்ணையிக்க முடியாது, அது பறக்க விடும் நபரின் பிடியில் இருக்கும்..என்றேனும் காற்றின் தீவிரம் குறைந்தால் ஏதும் செய்ய முடியாமல் கீழே வந்து விலவேண்டி வரும், பின் மேலே மீண்டும் பறக்க காற்றுக்காக காத்திருக்க வேண்டும்.

குறிப்பாக பட்டத்தை அறுத்து விட ஒரு கூட்டமே செயல் படும்.அது போல தனக்கு என்று சுயநோக்கம் இல்லாமல், நன்றாக வாழ்ந்தால் போதும் ,அது எப்படி, எதன் மூலம் இருந்தாலும் என்ன என்றால் ,அவன் ஒரு பட்டம் போல ஆகிவிடுகிறான்.

எனது இந்த வருடம் ஊதிய உயர்வை எனது அலுவலகம் உயர்த்தவில்லை, இந்த அரசாங்கம் எனக்கு இந்த சலுகை தரவில்லை, அவனால் எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை போன்ற விஷயங்களை மனதில் வைத்து உள்ளவன் ஒரு பட்டமே…….

தனக்கு என்று சுயநோக்கம் மற்றும் சுய பரிசோதனை கொண்டு உள்ளவனாகவும், யாரையும் நம்பி இல்லாத மனிதராக இருந்தால், நீ பறவை போல் உனக்கான திசையையும், உயரத்தையும் தேர்ந்து எடுத்து கொள்ளலாம். எப்போது வேண்டுமானலும் உயர பறக்கலாம், இளைப்பாறலாம். காற்றுக்காக காத்திராமல், அந்தக் காற்றைய எதிர்த்து சிறகு அடிக்கலாம்.

இப்பொழுது உன் மனதை கேள்…நீ பறவையா இல்லை பட்டமா??

ஆயிரமாயிரம் பட்டங்களுடன் ஒன்றாக

அரவிந்த் பால்பாண்டி

Leave a comment